படிக்கட்டு வசதியில்லாத பேரூராட்சி வணிக வளாகம்
பேரூராட்சி வணிக வளாகத்தில் மேல் தளத்திற்குச் செல்ல பாதுகாப்பான படிக்கட்டு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வியாபாரிகள் வேண்டுகோள்
குமரலிங்கம்,
குமரலிங்கத்தில் அமைந்துள்ள பேரூராட்சி வணிக வளாகத்தில் மேல் தளத்திற்குச் செல்ல பாதுகாப்பான படிக்கட்டு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வியாபாரிகள் வேண்டுகோள்.
பேரூராட்சி வணிக வளாகம்
குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன்கருதியும் பேரூராட்சி நிர்வாகத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் பொருட்டும் குமரலிங்கத்தின் மையப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தளம் கொண்ட வணிக வளாகம் அமைக்கப்பட்டது. இதில் கீழ்ப்புறம் 12 கடைகளும், மேல் தளத்தில் 12 கடைகளும் அமைக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தின் மேல் தளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் பின்புறம் அமைக்கப்பட்டது. இங்கு சுகாதார வளாகம் உள்ளது. மேலும் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு இந்தப் படிக்கட்டுகள் தெரிவதும் இல்லை.இது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அதிருப்தி ஏற்படுத்தியது.
இதனால் மேல்தளத்தில் உள்ள கடைகள் வியாபாரிகளுக்கு பிடிக்காமல் போகவே ஒருசில கடைகளைத் தவிர மற்றவை பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக வியாபாரிகளின் நலன்கருதி எஸ் வடிவ சுருள் படிக்கட்டுகள் மேல் தளத்திற்கு அமைக்கப்பட்டது. இந்தப் படிக்கட்டுகளும் வயதானவர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் மேலே செல்ல சிரமமாகவே உள்ளது. பின்புறப் படிக்கட்டுகள் சுகாதார வளாகத்தின் வழியே செல்வதால் படிக்கட்டுகள் மிகவும் அசுத்தமாக உள்ளது. மேலும் மதுப் பிரியர்கள் இங்கே அமர்ந்து மது அருந்துவதால் பெண்கள் குழந்தைகளுக்கு அச்சமாகவும் உள்ளது.
கோரிக்கை
குமரலிங்கம் பகுதியில் வியாபாரிகளின் தேவைகளுக்கு கடைகள் தேவைப்படும் நிலையில் மேல் தளம் செல்ல நல்ல பாதுகாப்பான படிக்கட்டு வசதி ஏற்படுத்தியும் கீழ்தளத்தில் உள்ள ஒரு சில கடைகள் உள்வாடகைக்கு இயங்குவதை சரி செய்தும் நிதி இழப்பை சரி செய்வதன் மூலம்
குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நிதியை உயர்ந்த வாய்ப்பு உள்ளது. மக்கள் நலனையும் தேவையும் கருத்திற்கொண்டு பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் வியாபாரிகளும் வேண்டுகோள் விடுத்தனர்.
Related Tags :
Next Story