தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது
சேவூர் வாரச்சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது
சேவூர்,
தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் வரத்து குறைவால் சேவூர் வாரச்சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சேவூரில் திங்கட்கிழமையன்று வாரச்சந்தை கூடுகிறது. வாரச்சந்தையில் 800 கடைகளுக்கு மேல் செயல்படுகிறது. இங்கு சேவூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்கிளில் விளையும் விலை பொருட்களை அதிகாலையிலேயே கொண்டு வந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.
தொடர் மழை
இந்நிலையில், ஐப்பசி மாதம் முதல் தொடர் மழையால் தக்காளி விலைச்சல் குறைந்துள்ளது.இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது கடந்த 20 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் குறைத்துள்ளது.மழையால் ஏராளமான தக்காளிகள் வீணாகியும், வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது. கடந்த மாதம் ரூ.40 விற்ற தக்காளி படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.140க்கு விற்கப்படுகிறது என்றார்.
இது குறித்து விவசாயிடம் கேட்டபோது, தொடர் மழையால் செடிகளில் பூக்கள் உதிர்ந்து வருகின்றன.மேலும் தற்போது கனமழையால் விளைநிலங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் செடியிலேயே தக்காளிகள் அழுகி விடுகிறது.ஒரு சில தக்காளி செடிகள் மழை நீர் தேங்கி இருப்பதால் செடியும் சேர்ந்து அழுகி விட்டது. மழை குறைந்தால் தக்காளி வரத்து அதிகரிக்கும் என்றார்.
Related Tags :
Next Story