பழங்குடியினர் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளை ஆவணப்படுத்த நடவடிக்கை


பழங்குடியினர் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளை ஆவணப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Nov 2021 7:33 PM IST (Updated: 22 Nov 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில திட்டக்குழு உறுப்பினர் சிவராமன் கூறினார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில திட்டக்குழு உறுப்பினர் சிவராமன் கூறினார்.

பழங்குடியினருக்கு பயிற்சி

இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம், தமிழக பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் பழங்குடியினர்களுக்கு மூலிகை தாவரங்கள் குறித்த பயிற்சி ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. பயிற்சிக்கு மைய இயக்குனர் உதயகுமார் தலைமை தாங்கினார். 

நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி பயிற்சியை தொடங்கி வைத்து பேசும்போது, நீலகிரியில் பழங்குடியின மக்கள் காடு சார்ந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர். மூதாதையர்கள் பயன்படுத்திய மூலிகை சார்ந்த மருந்துகளின் பயன்கள் குறித்து தெரிவிக்கலாம். பழங்குடியினர்களுக்கு ரத்த சோகை குறைபாட்டால் சிக்கில் செல் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூலிகை குணங்களை அறிந்து பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார். 

மூலிகை மருந்துகள்

பின்னர் சென்னை சித்தா ஆரோக்யா முதன்மை டாக்டரும், தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினருமான சிவராமன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரியில் 6 வகையான பழங்குடியினர்கள் வாழ்வியல் முறை அழகானது.

அவர்களது நல்ல உணவு, மருத்துவம், பண்பாடு போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்வதே இந்த பயிற்சியின் நோக்கமாகும். பழங்குடியினர்கள் உடல்நலம், கல்வி மேம்பட வேண்டும். அறிவியல் ரீதியாக பழங்குடியினர்கள் பயன்படுத்திய மூலிகை செடிகளில் இருந்து கிடைக்கும் மருந்துகளின் பயன்களை கேட்டு வருகிறோம். இதன் மூலம் அவர்களது அன்றாட உடல் பராமரிப்பு, மூலிகை பயன்பாட்டை வைத்து திட்ட வரையறை செய்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஆவணப்படுத்தப்பட உள்ளது. 

நேரடி விற்பனை

கேரளாவில் ஆரோக்கிய பச்சா என்ற மூலிகை மருந்துக்கு இந்திய அரசு காப்புரிமை வழங்கியது. ஆயுஷ் துறையின் கீழ் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. பழங்குடியினர்கள் பயன்படுத்தும் நல்ல உணவு, மூலிகை மருந்துகள் அவர்களது பெயரிலேயே காப்புரிமை வாங்கலாம்.

மலேரியாவில் இருந்து காத்துக்கொள்வதற்காக உடல் மாறிய போது, சிக்கில் செல் அனீமியா ஏற்பட்டது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. மூலிகை தாவரங்கள், விதைகளை பாதுகாக்கவும், அழியாமல் இருக்கவும் நிதி ஒதுக்கப்படுகிறது. பழங்குடியினர்கள் இடைத்தரகர் இல்லாமல் தங்களது உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story