தங்க சுரங்க வனப்பகுதிக்குள் மக்கள் செல்வதை தடுக்க எச்சரிக்கை பலகைகள்


தங்க சுரங்க வனப்பகுதிக்குள் மக்கள் செல்வதை தடுக்க எச்சரிக்கை பலகைகள்
x
தினத்தந்தி 22 Nov 2021 7:33 PM IST (Updated: 22 Nov 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

தங்க சுரங்க வனப்பகுதிக்குள் மக்கள் செல்வதை தடுக்க எச்சரிக்கை பலகைகள்

கூடலூர்

கூடலூர் தாலுகா நாடுகாணி, தேவாலா பகுதியில் ஆங்கிலேயர் கால தங்க சுரங்க(கோல்டு மைன்ஸ்) வனம் உள்ளது. இங்கு சிலர் அத்துமீறி தங்கத்துகள் படிந்த மண்ணை தோண்டி எடுத்து செல்கின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் ஏராளமான பள்ளங்கள் காணப்படுகிறது. இதில் வனவிலங்குகள் தவறி விழுந்து உயிரிழக்கிறது. இதனால் கோல்டு மைன்ஸ் வனத்துக்குள் தேவாலா போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 

இருப்பினும் சிலர் கோல்டு மைன்ஸ் வனத்துக்குள் அத்துமீறுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும், வனத்துக்குள் அத்துமீறாமல் இருக்கவும் வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வனத்துறையினர் நாடுகாணி, தேவாலா, கைதகொல்லி, பொன்னூர் உள்பட பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் அத்துமீறி தங்கத்துகள் கலந்த மண் எடுப்பது சட்டத்தின்படி குற்றமாகும். எனவே தடையை மீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story