கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டி போலீசார் சோதனையில் சிக்கினார்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டி போலீசாரின் சோதனையில் சிக்கினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தடுக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அனைவரையும் சோதனை செய்த பின்னரே கூட்ட அரங்குக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்த நிலையில் கையில் பையுடன் வந்த ஒரு மூதாட்டியை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த மூதாட்டி மண்எண்ணெய் கேனை சேலையில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. உடனே அந்த கேனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், அவர் சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டியை சேர்ந்த நாச்சம்மாள் (வயது 70) என்பதும், அவருடைய சொத்துகளை ஏமாற்றி வாங்கிக்கொண்ட மகன்கள் மூதாட்டியை பராமரிக்காமல் விட்டுவிட்டதால் வாழ வழியின்றி கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மூதாட்டியின் பிரச்சினை குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறிய போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story