ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய் சேதம்


ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய் சேதம்
x
தினத்தந்தி 22 Nov 2021 8:34 PM IST (Updated: 22 Nov 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய் சேதம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய் சேதம் அடைந்து உள்ளது. அதை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

பழைய ஆயக்கட்டு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் பெரியணை, வடக்கலுர், அரியாபுரம், பள்ளிவிளங்கால், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

பழைய ஆயக்கட்டிற்கு உட்பட்ட 5 வாய்க்கால்களில் முதல், 2-ம் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் கால்வாய்கள் சீரமைக்காமல் புதர்மண்டி கிடக்கின்றன. எனவே கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். 

கால்வாய் சேதம் 

இந்த நிலையில் ஆனைமலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மழையின் காரணமாக கால் வாய்களின் கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. காளியா புரம் அருகே காரப்பட்டி வாய்க்காலில் 4 கி.மீ. தூரத்தில் 13-வது மதகு அருகே மண்சரிவு ஏற்பட்டு கால்வாய் சேதமடைந்து உள்ளது. 

இதனால் கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப் பட்டு உள்ளது. ஆனால் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்து இல்லை. 

சீரமைக்க வேண்டும்

தற்போது அதிகாரிகளின் அலட்சியத்தால் கால்வாய் மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டு உள்ளது. தற்போது 2-ம் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயராகி வரும் நிலையில், காரப்பட்டி கால்வாய் சேதத்தால் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் கால்வாய் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்கள்.


Next Story