ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4¾ பவுன் சங்கிலி பறிப்பு

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4¾ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 9:13 PM IST (Updated: 22 Nov 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4¾ பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4¾ பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
4¾ பவுன் சங்கிலி பறிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் வானவன்மாதேவி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் . இவருடைய  மனைவி விஜயா (வயது40). இவர் சம்பவத்தன்று வேதாரண்யம் நாகை மெயின் ரோட்டில் கள்ளிமேடு அடப்பாறு பாலத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், விஜயா கழுத்தில் கிடந்த 4¾ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
 இதுகுறித்து விஜயா தலைஞாயிறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் வேட்டைகாரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசிதேடி வருகின்றனர்.

Next Story