ஏரல் அருகே தாமிரபரணியில் குளித்த வாலிபர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்
ஏரல் அருகே தாமிரபரணியில் குளித்த வாலிபர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்
ஏரல்:
சாயர்புரம் சர்ச்தெருவை சேர்ந்தவர் ஜான்சன் மகன் கிப்சன் (வயது 30). இவர் குளிர்பானம் ஏஜெண்டு எடுத்து நடத்தி தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் நண்பருடன் மேலமங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது கிப்சன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட கிப்சனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story