திருத்தணி பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை கிண்டல் செய்த 3 பேர் கைது
இளைஞர்கள், இளம்பெண்ணை கேலியும், கிண்டலும் செய்து வம்புக்கு இழுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரை மடக்கி பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இந்திரா நகரை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் வெளியூர் செல்வதற்காக திருத்தணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள், இளம்பெண்ணை கேலியும், கிண்டலும் செய்து வம்புக்கு இழுத்தனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரை மடக்கி பிடித்தனர், போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி (வயது 40), குமார் (35), துரை (48) என்பது தெரியவந்தது. அந்த 3 பேரை போலீசார் கைது செய்து, தப்பி ஓடிய ரவி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story