கல்வராயன்மலையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கல்வராயன்மலையில் மக்களை தேடி மருத்துவ திட்டம்
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாயம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், துணைத் தலைவர் பாட்ஷாபீ ஜாகிர்உசேன், டாக்டர்கள் அருண், பிரசாந்த், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த வாகனம் மூலம் மாயம்பாடி, பொட்டியம், கவியம், மேல்முண்டியூர், தாழ்முண்டியூர், மல்லிகைபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்படும். இதனை மலைவாழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கல்வராயன்மலை ஒன்றிய செயலாளர்கள் சின்னதம்பி, கிருஷ்ணன், பொட்டியம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story