வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை


வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2021 10:29 PM IST (Updated: 22 Nov 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவினாசி அருகே வடமாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  4 பேரை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
வட மாநில தொழிலாளி
பீகார் மாநிலத்தை சேர்ந்த  ரித்தேஸ்குமார் என்பவரது மகன்  அனில்குமார் வயது 23. இவர்  திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியை வேலை பார்த்து வந்தார். இவர் 14 வயது  சிறுமியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி, வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி வந்துள்ளார். 
இந்த தகவலை அந்த  சிறுமி,  ரவிச்சந்திரன் 43 என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் நேராக அனில்குமாரை சந்தித்து எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனில்குமார் கோபத்தில் ரவிச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
அடித்துக்கொலை 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனில்குமார் எம்.நாதம்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன், ராஜூ மகன் பாபு 40 எம். நாதம்பாளையத்தை சேர்ந்த  செல்வராஜ் மகன்  மணிகண்டன் 24 பழனிச்சாமி மகன் ரஞ்சித்23 ஆகியோர் அனில்குமாரை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு நைசாக சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அனில்குமாரை மரக்கட்டையால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் மயக்கம் அடைந்து கிடந்த அனில்குமாரை அவருடைய நண்பர்கள் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனில்குமார் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து சென்று அனில்குமார் உடலை மீட்டு பிரேத பரசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரன்,  பாபு,  மணிகண்டன் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story