தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கம்பத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
கம்பம் 10-வது வார்டு சோட்டானிக்கரை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நதியா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் ரமேஷ் கவலையுடன் இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை புதுக்குளம் சாலையில் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேசின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story