விழுப்புரம் மாவட்டத்தில் தனித்தனி சம்பவம் ஆற்றில் மூழ்கி டிரைவர் உள்பட 2 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் தனித்தனி சம்பவத்தில் ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்
வளவனூர்
கார் டிரைவர்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் இந்திராநகர், சிங்காயபேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 41). கார் டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனா்.
இந்த நிலையில் விஜயகுமார் நேற்று முன்தினம் மாலை மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டம் வளவனூர் சொர்ணாவூர் கீழ்பாதி புதிய அணைக்கட்டு அருகே விஜயகுமாரின் உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வளவனூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணை
நடத்தி வருகிறார்கள்.
கோவிலுக்கு சென்றபோது
விக்கிரவாண்டி அடுத்த வி.மாத்துார் தடுப்பணையில் 65 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தாசில்தார் இளவரசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன், தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் ராஜவேலு மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த பெண் விக்கிரவாண்டியை அடுத்த வாக்கூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி குப்பு(65) என்பதும், சம்பவத்தன்று வாக்கூர் பம்பை ஆற்றின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றபோது தவறி ஆற்றுக்குள் விழுந்த அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வி.மாத்துார் தடுப்பணை அருகே முட்புதரில் உடல் ஒதுங்கியது தெரியவந்தது. இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story