கீரமங்கலம் பகுதியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ.140-க்கு விற்பனை
கீரமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி விலை வேகமாக உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனையானது.
கீரமங்கலம்:
தக்காளி விலை உயர்வு
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் பயிர்களும் மழையால் நாசமாகி உள்ளது. அதனால் அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளது. அதே போல தக்காளி பழம் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது.
கீரமங்கலம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ ரூ.30-க்கும் குறைவாக விற்பனை ஆனது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி கிலோ விலை ரூ.80-க்கு விற்பனையானது. அதன் பிறகு வரத்து குறைவாக உள்ளதால் நாளுக்கு நாள் விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.
பாக்கெட்டுகளில் தக்காளி
அதே போல இதுவரை பல்வேறு பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவது போல தக்காளியும் விலை உயர்ந்துள்ளதால் 2 தக்காளி பழத்தை ஒரு பாக்கெட்டில் அடைத்து ஒரு பாக்கெட் விலை ரூ.18 என்று விலை வைத்து விற்பனை செய்யப்படும் படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் உணவுக்காக அதிகம் பயன்படுத்தும் தக்காளி பழம் விரைவில் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story