ரேஷன் அரிசி கடத்திய வேனை விரட்டிப் பிடித்த போலீசார்
ரேஷன் அரிசி கடத்திய வேனை போக்குவரத்து போலீசார் விரட்டிப்பிடித்தனர்.
இளையான்குடி,
ரேஷன் அரிசி கடத்திய வேனை போக்குவரத்து போலீசார் விரட்டிப்பிடித்தனர்.
மினிலாரி
இளையான்குடி புறவழிச்சாலையில் இளையான்குடி போக்கு வரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இளையான்குடி புறவழிச் சாலையில் சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்தது.
அந்த வேனை போக்குவரத்து போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், காவலர்கள் பாலசண்முகம், கண்ணன் ஆகியோர் சோதனைக்கு நிறுத்த முயன்றபோது நிற்காமல் இளையான்குடி- புதூர் நோக்கி வேகமாக சென்றது. நிற்காமல் சென்ற வேனை போலீசார் புதூரில் விரட்டிப்பிடித்தனர்.
பறிமுதல்
சோதனையின்போது 20 மூடை ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேனை ஓட்டிவந்த டிரைவர் திருப்புவனம் பகுதியை சேர்ந்த ராஜூ மகன் முத்திருளன் (வயது26). திருப்புவனம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் முத்து ராஜா (24), மானாமதுரை பகுதியை சேர்ந்த பாண்டி மகன் தாமோதரன் (24) ஆகியோரை கைது செய்து ரேஷன் அரிசி ஏற்றி வந்த வேனை பறிமுதல் செய்தனர்.
வேன் மற்றும் குற்றவாளிகளை குடிமைப்பொருள் வழங்கல் துறை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story