பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.1லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.1லட்சம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Nov 2021 11:33 PM IST (Updated: 22 Nov 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.1லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சென்னிவயல் பகுதியை சேர்ந்த கார்த்திக்கின் மனைவி பிரேமா (வயது  30). இவரிடம் செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைனில் வேலை தொடர்பாக மர்மநபர் பேசியுள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியதில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 800-ஐ திருப்பி தராமல் மோசடி செய்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் பிரேமா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story