கரூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்

கரூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்
பெட்ரோல், டீசல், வாட் வரி விலையை குறைக்க வலியுறுத்தி மாநில அரசை கண்டித்து நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கணேசமூர்த்தி, மகளிர் அணி தலைவர் ஜெயலெட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் மாநில மகளிர் அணி துணை தலைவி மீனா வினோத்குமார், தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.வி.எஸ். செல்வராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Next Story