பாலியல் தொந்தரவுக்கு கடும்தண்டனை வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்


பாலியல் தொந்தரவுக்கு கடும்தண்டனை வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2021 11:41 PM IST (Updated: 22 Nov 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுக்கு கடும்தண்டனை வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லல், 
பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுக்கு கடும்தண்டனை வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் நடவடிக்கை
கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
இந்தநிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது தமிழக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கல்லல்  பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். 
பரபரப்பு
அதன்பின்னர் போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். நேற்று காலை திடீரென பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story