வாழவச்சனூர் வாரச்சந்தைக்கு மழை காரணமாக கால்நடைகள் வரத்து குறைந்தது
வாழவச்சனூர் வாரச்சந்தையில் மழையின் காரணமாக குறைந்த அளவே கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
வாணாபுரம்
வாழவச்சனூர் வாரச்சந்தையில் மழையின் காரணமாக குறைந்த அளவே கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
கால்நடைகள் வரத்து குறைந்தது
திருவண்ணாமலை அருகே உள்ள வாழவச்சனூரில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகள், மாடுகள், கோழி உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
தண்டராம்பட்டு, தானிப்பாடி, செங்கம், வேட்டவலம், திருவண்ணாமலை, மணலூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்து கால்நடைகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று வாரச்சந்தை நடந்தது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கால்நடைகளை விவசாயிகள் விற்பனைக்காக குறைந்த அளவே கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகளும் கால்நடைகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
தொடர் மழை
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் வெளியூர் பகுதிகளில் இருந்து நாங்கள் கடும் சிரமப்பட்டு வரக்கூடிய சூழல் இருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கால்நடைகளை எதிர்பார்த்த விலைக்கு வாங்க முடியவில்லை என்றனர்.
விவசாயிகள் கூறுகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகளுக்கு சரியான முறையில் தீவனம் இல்லை. இதனால் ஆடு, மாடுகளை குறைந்த விலைக்கே வியாபாரிகள் கேட்கிறார்கள் என்றனர்.
ஒவ்வொரு வாரமும் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இந்த சந்தையில் நேற்று ரூ.2 கோடிவரை மட்டுமே வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story