பாலாற்று வெள்ளத்தில் 5 நாளாக சிக்கித்தவித்த மாடுகள்
பாலாற்று வெள்ளத்தில் 5 நாளாக சிக்கித்தவித்த மாடுகள்
ராணிப்பேட்டை
ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணையில் இருந்து உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டதினாலும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ராணிப்பேட்டை மாவட்டம், கீழ் விஷாரம் பகுதியை சேர்ந்த ராஜா, ஏழுமலை, காளி ஆகிய 3 பேருடைய 3 காளை மாடுகள், 1 பசுமாடு, 1 கன்று குட்டி ஆகியவை பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. வெள்ளத்தில் நீந்திய 5 மாடுகளும் புளியங்கண்ணு பகுதியில் பாலாற்றின் மையப் பகுதியில் உள்ள மேடான பகுதியில் கரையேறி வெளியில் வர முடியாமல் தவித்து வந்தன.
நேற்று மழை இல்லாததால் அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் இதனை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாலாற்றில் இறங்கி படகின் மூலமும், கயிற்றின் மூலமும் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மாடுகளை உயிருடன் மீட்டனர். போலீசாரும் மீட்புப் பணியில் தீயணைப்பு துறையினருடன் ஈடுபட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மாடுகள் மாட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
Related Tags :
Next Story