திருவண்ணாமலையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணைத்தலைவர் அரசுரங்கேஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இதில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வாட் வாரியை குறைக்க தமிழக அரசு மறுப்பதாக கூறி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், சதீஷ், சேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் குணசேகரன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் ராஜ தமயந்தி, மகளிர் அணி பொருளாளர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story