குளித்தலை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவத்துறை குழுவினர் ஆய்வு
குளித்தலை அரசு மருத்துவமனை தரம் குறித்து தேசிய மருத்துவத்துறை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
குளித்தலை
குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய தேசிய மருத்துவத்துறை சார்ந்த குழுவினர்களான பங்கஜ்மதூர், ஜூரிபரத்கலிடா மற்றும் சவிதா ஆகியோர் நேற்று குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலரான பூமிநாதன் தலைமையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். பின்னர் இந்த மருத்துவமனை குறித்த வீடியோ அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இதையடுத்து ஆய்வு செய்ய வந்த 3 பேரும் தனித்தனியாக பிரிந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மருத்துவ வசதிகள், பொதுமக்களுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனை, தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்ய தொடங்கினர்.
நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு இவர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள். குளித்தலை அரசு மருத்துவமனை குறித்த முழு ஆய்வு முடிவுகளை அவர்கள் தேசிய மருத்துவ துறைக்கு சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story