அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 22 Nov 2021 11:55 PM IST (Updated: 22 Nov 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலை,
சோமவார விழா
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ரெத்தினகிரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் சோமவார விழாவாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இக்கோவிலின் முதல் சோமவார விழா நேற்று தொடங்கியது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கும் மக்கள் விரதம் இருப்பதுபோல, இந்த சோமவார தினத்தன்று சிவபெருமானை வேண்டி விரதம் இருந்து மலையேறி அவரை தரிசனம் செய்துவந்தால் சகல நண்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். 
இதன்காரணமாக இங்கு நடைபெறும் 5 சோமவார தினத்தன்றும் பல்வேறு ஊர்களில் மட்டுமல்லாமல், பல மாவட்டங்களில் வசிக்கும் இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்குவந்து மலைமேல் வீற்றிருக்கும் ரெத்தினகிரீஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.
பக்தர்கள் சாமி தரிசனம்
அதுபோல இந்த ஆண்டு இக்கோவிலில் முதல் சோமவாரம் நேற்று தொடங்கியது. இதில் குளித்தலை மற்றும் குளித்தலை சுற்றுவட்டாரப் கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள் இக்கோவிலுக்கு வந்து 1017 படிகள் கொண்ட கோவில் மலை உச்சிக்கு சென்றும், அடிவாரத்தில் நின்றபடியும் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story