ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
அரக்கோணம்
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 78). மிளகாய் வியாபாரம் செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மிளகாய் விற்றதற்கான பணம் வசூல் செய்வதற்காக நேற்று காலை திருவள்ளூர் மாவட்டம் மனவூர் கிராமத்திற்கு செய்வதற்காக அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற ரெயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story