முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் 71000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது


முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் 71000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 23 Nov 2021 12:22 AM IST (Updated: 23 Nov 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 71 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 71 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

மருத்துவ காப்பீடு அட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன் அடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசுப் பொருட்கள், 30 பொதுமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு அட்டைகள், மருத்துவக் காப்பீட்டுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கைகள் மற்றும் கால்களை இழந்த 9 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

71,000 பேருக்கு சிகிச்சை 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் 4 அரசு மருத்துவமனைகள், 3 தனியார் மருத்துவமனைளில் செயல்படுத்தப்படுகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதுவரையில் 71 ஆயிரத்து 44 நபர்களுக்கு ரூ.136 கோடியே 24 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்கள் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு தொடர்பாக பதிவு செய்யும் அறையில் புகைப்படம் எடுத்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, டாக்டர் கண்ணகி, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஞானம் மற்றும் சவுகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story