பழைய பேட்டை பகுதியில் இன்று மின்தடை


பழைய பேட்டை பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 23 Nov 2021 12:38 AM IST (Updated: 23 Nov 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

பழைய பேட்டை, டவுன் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

நெல்லை:
பழைய பேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அந்தந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் பெறும் நெல்லை டவுன் மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்குப் பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில்பேட்டை, பாட்ட பத்து, அபிஷேகபட்டி, பொருட்காட்சி திடல், பூம்புகார், ஸ்ரீபுரம், சுந்திர ரோடு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழரத வீதி போஸ் மார்க்கெட், ஏ.பி.மாடத்தெரு, சுவாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்தி முடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார் குளம் மார்க்கெட் தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என நெல்லை நகர்ப்புற மின் வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.
பணகுடி அண்ணா நகர் காற்றாலைப்பண்ணை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தளவாய்புரம், அண்ணாநகர் மேற்கு, தர்மலிங்கபுரம், பணகுடி மேற்கு, சொக்கலிங்கபுரம், வீரபாண்டியன் கிராமம், சமாதானபுரம், பாஸ்கராபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று வடக்கன்குளம் காற்றாலை பண்ணை மின் திட்ட உதவி செயற்பொறியாளர் ஜாண் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

Next Story