மாவட்ட செய்திகள்

மாடு முட்டி விவசாயி பலி + "||" + death

மாடு முட்டி விவசாயி பலி

மாடு முட்டி விவசாயி பலி
ராஜபாளையம் அருகே மாடுமுட்டி விவசாயி பரிதாபமாக பலியானார்.
ராஜபாளையம் 
ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது 75). விவசாய கூலி தொழிலாளி.  கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவரம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோட்டில் திரிந்து கொண்டிருந்த மாடுகள் திடீரென மிரண்டு ஓடியபோது மாடு ஒன்று அவரை முட்டி கீழே தள்ளியது. இதில் கீழே விழுந்த ராக்கப்பன் வயிற்றின் மீது ஏறி மிதித்து மாடு ஓடியது. இதனால் ராக்கப்பன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராக்கப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இறந்தார்.
2. மாணவன் மர்மச்சாவு
மாணவன் மர்மச்சாவு
3. டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஆட்டோ டிரைவர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
4. கார் மோதி டிராக்டர் மெக்கானிக் சாவு
விழுப்புரத்தில் கார் மோதி டிராக்டர் மெக்கானிக் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள், விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. முந்திரி தோப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய விவசாயி
முந்திரி தோப்பில் விவசாயி தூக்கில் பிணமாக தொங்கினார்.