மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2021 12:55 AM IST (Updated: 23 Nov 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவர் அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை பாளையங்கோட்டை மார்க்கெட் பெருமாள் கீழரதவீதியில் உள்ள உறவினர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை புதுமனை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மாரிமுத்து (29) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். 

Next Story