கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்எண்ணெய் பாட்டில்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தைச் சேர்ந்தவர் முத்து வேல்முருகன் (வயது 62). இவருடைய மனைவி ராணி (58). இவர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த மண்எண்ணெய் பாட்டிலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்களுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை அளந்து தர வேண்டுமென்று கலெக்டர் அலுவலகம், அரசு அலுவலகங்களிலும் மனு கொடுத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களது நிலத்தை உடனே அளந்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் வள்ளியூர் அருகே உள்ள பழுவூர் கண்ணங்குளத்தை சேர்ந்த செல்வகுமார், அவருடைய மனைவி சுமிதா ஆகியோரும் தீக்குளிக்க மண்எண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு வாசலில் சோதனையின்போது மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்களுக்கு சொந்தமான 20 பவுன் நகை கடந்த 2020-ம் ஆண்டு காணாமல் போய்விட்டது. இதுகுறித்து பழவூர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நகையை எடுத்து சென்றதாக சந்தேகப்படும் பெண் மீது புகார் கொடுத்தும் போலீசார் அதை விசாரிக்கவில்லை. எனவே முறையாக விசாரித்து எங்களது நகைகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story