சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 23 Nov 2021 1:06 AM IST (Updated: 23 Nov 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் மற்றும் ராஜபாளையம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விருதுநகர் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க கிளை தலைவர் ஜீவானந்தம் மற்றும் ராஜபாளையம் கிளை முன்பு கிளைத்தலைவர் சண்முகவேல் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் கிளை முன்பு போராட்டத்தை சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் வெள்ளத்துரை தொடங்கி வைத்தார். 


Next Story