மாவட்ட செய்திகள்

போலி கிரைய பத்திரம்; 6 பேர் மீது வழக்கு + "||" + Fake purchase bond; Case against 6 people

போலி கிரைய பத்திரம்; 6 பேர் மீது வழக்கு

போலி கிரைய பத்திரம்; 6 பேர் மீது வழக்கு
சுரண்டை அருகே போலி கிரைய பத்திரம் பதிந்ததாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே பரங்குன்றாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் - ரஞ்சிதா தம்பதியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செல்லப்பன் நீண்ட நாட்களாக சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது தனது சொந்த ஊரான பரங்குன்றாபுரத்தில் 6 ஏக்கர் இடத்தை வாங்கினார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செல்லப்பன் மனைவி இறந்தார். அதில் இருந்து 6 மாதம் கழித்து செல்லப்பன் இறந்துவிட்டார்.
இவரது சித்தி மகள் அதே ஊரைச் சேர்ந்த பால் என்பவரது மனைவி தங்கவடிவு. இவர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அதில், செல்லப்பனுக்கு சொந்தமான 6 ஏக்கர் இடத்தை அவரது உறவினர்களான ஆனைகுளத்தைச் சேர்ந்த சண்முகத்தாய் (68), சுரண்டையை சேர்ந்த ராமலட்சுமி (63), ராஜகோபாலபேரியை சேர்ந்த ராமர் (66), மருதுபுரத்தைச் சேர்ந்த வெள்ளத்தாய் (68), சென்னையை சேர்ந்த வைத்திலிங்கம் (80), சாம்பவர்வடகரையை சேர்ந்த மெர்லின் (29) ஆகிய 6 பேர் முறைகேடாக அவர்களது பெயரில் போலி பத்திரம் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேர் மீது சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
வேலாயுதம்பாளையம் அருகே கார் பட்டறை உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை; கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.