நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Nov 2021 1:33 AM IST (Updated: 23 Nov 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் 17-வது வார்டு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் அதே இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுரண்டை நகர அ.தி.மு.க. செயலாளர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் வசந்தன், காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி வி.எஸ்.சமுத்திரம் உள்பட 100-க்கும் ஏற்பட்ட பெண்கள் சுரண்டை நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் பழனிநாடார் எம்.எல்.ஏ. வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story