தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
செய்தி வெளியான அன்றே நடவடிக்கை
நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஓசூர் பைபாஸ் சாலை ஓரமாக கொத்தடிமை காலனி என்று பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று புகைப்படத்துடன் ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. செய்தியை பார்த்த தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உடனே நடவடிக்கை எடுத்தார். அதாவது கொத்தடிமை காலனி என்ற பெயரை அழிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பெயர் பலகையில் இருந்த கொத்தடிமை காலனி என்ற பெயர் வர்ணம் பூசி அழிக்கப்பட்டது. செய்தி வெளியான அன்றே நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’ க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
-ஜோதி, நல்லம்பள்ளி, தர்மபுரி.
நோய் பரவும் அபாயம்
மேட்டூர் தாலுகா கோனூர் கிராமத்தில் உள்ள ஏரிக்காடு பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதையில் குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலையரசன், ஏரிக்காடு, மேட்டூர்.
சேலம் நரசோதிப்பட்டி சைதன்யா பள்ளிக்கு வலதுபுறம் விநாயகர் கோவில் உள்ளது. அங்கு எப்போதும் குப்பை தொட்டியில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், நரசோதிப்பட்டி, சேலம் .
சேறும் சகதியுமான சாலை
சேலம் சூரமங்கலம் 25-வது வார்டில் உள்ளது வசக்கட்டு காலனி கோரிக்காடு. இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது மழை காலம் என்பதால் அங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், கோரிக்காடு, சேலம்.
வேகத்தடையில் வர்ணம் வேண்டும்
தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டியில் புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டது. வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வேகத்தடையில் சிவப்பு நிற விளக்கு, வெள்ளை நிற பெயிண்டு அடிக்க வேண்டும். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இந்த பகுதியில் வேகத்தடை தெரியும் வகையில் சாலையோரம் எச்சரிக்கை பலகையும் வைக்க வேண்டும்.
-வி.அர்ஜூன், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
போக்குவரத்துக்கு இடையூறான சிமெண்டு் குழாய்
சேலம் மாநகரில் ஜங்ஷன் முல்லைநகர் சாய்பாபா கோவில் செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக ரோட்டின் குறுக்கே சிமெண்டு் குழாய் அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பணி முடிந்து வெகுநாட்கள் ஆகியும் இன்னும் அந்த சிமெண்டு குழாய் அப்படியே உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், அந்த வழியாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், முல்லைநகர், சேலம்.
தெரு விளக்கு வசதி
தர்மபுரி நெசவாளர் கூட்டுறவு நகர் 2-வது தெருவில் மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள தெருவிளக்கு கடந்த 8 மாதமாக எரியவில்லை. பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் பக்தர்களும், பொதுமக்களும் இந்த பகுதி வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து தர்மபுரி நகராட்சியில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இ்ந்த பகுதியில் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
-செந்தில்குமார், நெசவாளர் காலனி, தர்மபுரி.
பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி 58-வது வார்டு காமராஜர் தெருவில் சாக்கடை கால்வாய் பணி தொடங்கப்பட்டு பாதியில் நிற்கிறது. மழைக்காலம் என்பதால் அதிக மழை பெய்யும் போது தற்போதுள்ள மழை முழுமையும் சேதம் ஆகி விடும். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணியை முடிக்க வேண்டும்.
-மாணிக்கம், முணங்காடு, சேலம்.
போக்குவரத்து நெரிசல்
சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சிலர் மேம்பாலத்தில் ஒரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கேயே நின்று செல்போன் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போலீசார், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சேலம்.
Related Tags :
Next Story