மத்திய குழு அதிகாரிகள் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


மத்திய குழு அதிகாரிகள் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 Nov 2021 1:55 AM IST (Updated: 23 Nov 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

மத்திய குழு அதிகாரிகள் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நாகர்கோவில், 
நித்திரவிளை அருகே வைக்கலூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு அதிகாரிகள் பார்வையிட்டுவிட்டு காரில் திரும்பினர். அப்போது, பொதுமக்கள் சிலர் அங்கு திரண்டு வந்து நீர்வள அமைச்சகம் இயக்குனர் தங்கமணி, மின்சார அமைச்சகம் உதவி இயக்குனர் பவ்யா பாண்டே ஆகியோர் கார்களை முற்றுகையிட்டு நிறுத்தினர். 
அதனைத் தாடர்ந்து பொதுமக்கள் கூறும் போது ‘எங்கள் பகுதியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளையும் பார்வையிட வர வேண்டும்’ என்று கூறினர். இதையடுத்து அதிகாரிகள் காரில் இருந்து இறங்கி பொதுமக்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சன்று பார்வையிட்டனர்.
அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறும் போது, இங்கு ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்றனர். அவர்களிடம் அதிகாரிகள் கூறும் போது, ‘இது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதன்பின்பு  அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story