பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருச்சி
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின்பும், அதனை குறைக்காத மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. இளைஞரணி சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகர், புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன், மாநில செயற்குழு உறுப்பினர் கவுதம், மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story