குப்பைகள் அகற்றப்படுமா


குப்பைகள் அகற்றப்படுமா
x
தினத்தந்தி 23 Nov 2021 2:29 AM IST (Updated: 23 Nov 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

குப்பைகள் அகற்றப்படுமா

தஞ்சை பகுதியில் உள்ள நாகம்மாள்நகர் மற்றும் சேவியர்நகரில் உள்ள சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக நாகம்மாள்நகர் பகுதியில் குப்பைத்தொட்டி இருந்தும் அதன் அருகே குப்பைகள் அதிகளவில் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்கரபாணி தஞ்சை.

தஞ்சை மாவட்டம் கீழவாசல் பெரிய சாலை ரோடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சாலையும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பொதுமக்கள் கீழவாசல்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை அடுத்த உடையநாடு கிராமத்தில் உள்ள மதரசா தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.தேங்கிக்கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மழைநீர் சாலையை சூழ்ந்து கொள்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க அந்தப் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
 கருணாநிதி சேதுபாவாசத்திரம்.

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்த சிவபுரம் கிராமத்தின் அருகில் மகாராஜா சமுத்திரம் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கோழி இறைச்சிகள், இறந்து போன கால்நடைகளை மர்மநபர்கள் வீசிசெல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஆற்றுநீரில் கிருமிகள் உருவாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
முகமதுசித்திக திருவோணம்.

Next Story