பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Nov 2021 2:35 AM IST (Updated: 23 Nov 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

10 பேர் சிக்கினார்கள்

  பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடமும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசார் சோதனை நடத்தினார்கள்.

  அப்போது எந்த பயணிகளிடமும் தங்கம் கிடைக்கவில்லை. ஆனால் 10 பயணிகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை விமான நிலையத்தில் உள்ள தனி அறைக்கு சென்று துருவி, துருவி சோதனை நடத்தப்பட்டது. அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை உருக்கி பேஸ்ட் போல வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.1½ கோடி தங்கம்

  இதையடுத்து, 10 பேரையும் போலீசார் கைது செய்தாா்கள். அவர்களிடம் இருந்து 3 கிலோ 66 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. இவர்கள் 10 பேருக்கும் பின்னணியில் வேறு சிலர் இருப்பதும், அவர்கள் கொடுத்து அனுப்பிய தங்கத்தை தான், அவர்கள் கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  கைதான 10 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Next Story