சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கர்நாடக போலீஸ் துறைக்கு 10-வது இடம்
சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கர்நாடக போலீஸ் துறைக்கு 10-வது இடம் கிடைத்து உள்ளது.
பெங்களூரு:
சிறப்பான சேவை
டெல்லியில் உள்ள இந்திய போலீஸ் அறக்கட்டளை மாநில போலீஸ் துறைகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அதற்கு தரவரிசை பட்டியலை அளித்து வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான போலீஸ் துறையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்திய போலீஸ் அறக்கட்டளை தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதில் சிறப்பான முறையில் சேவை செய்த வகையில் ஆந்திர போலீஸ் துறை முதல் இடத்தை பிடித்து உள்ளது. தெலுங்கானா 2-வது இடத்தையும், கேரளா 4-வது இடத்தையும் பிடித்து உள்ளது. கர்நாடக போலீஸ் துறை 14-வது இடத்தில் உள்ளது.
10-வது இடம்
ஆனால் பதற்றம் நிறைந்த பகுதியில் சிறப்பான முறையில் சேவையாற்றும் வகையில் கர்நாடக போலீஸ் துறைக்கு 11-வது இடம் கிடைத்து உள்ளது. கலவரம் நடக்கும் போது அதை கர்நாடக போலீசார் சிறப்பான முறையில் கையாளுவதாக இந்திய போலீஸ் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையாகவும், பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதிலும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதிலும் கர்நாடக போலீசார் சிறந்து விளங்குவதாகவும் அறக்கட்டளை கூறியுள்ளது. சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் கர்நாடக போலீஸ் துறை 10-வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் கர்நாடக போலீசார் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story