வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 2:40 AM IST (Updated: 23 Nov 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை அண்ணா நகரில் தொகுப்பு வீடு ஒன்றில் வசித்து வருபவர் சின்னம்மாள்(வயது 90). இவரது கணவர் ராஜி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகன் பாஸ்கர்(55) வேறு ஒரு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று தினம் இரவு தனது தாய்க்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சென்ற பாஸ்கர், நேற்று காலை மீண்டும் அவரை பார்க்க வந்தார். அப்போது அவர் அழுது கொண்டிருந்ததை கண்ட பாஸ்கர், அவரிடம் விசாரித்தபோது, இரவில் 2 மர்ம நபர்கள் வந்து அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டதாக கூறினார். இதுகுறித்து பாஸ்கர் மங்களமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து, சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story