பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தர்மபுரியில் பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தமிழகத்தில் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் புவனேஸ்வர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் வெங்கட்ராஜ், கலைச்செல்வன், செல்லபாண்டியன், மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் அருணகிரி, மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் இமானுவேல், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி தலைவி கிருஷ்ணவேணி வரவேற்றார். கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கர், மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழகத்தில் பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜன், மாவட்ட செயலாளர் சவுந்தர்ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா, அறிவுசார் பிரிவு மாவட்ட தலைவர் பகலவன், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம், வட்டார தலைவர்கள் ராமகிருஷ்ணன், ராஜசேகர், பழனிசாமி, மாவட்ட நிர்வாகி சோபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ஜிம் சக்திவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story