தொடர் மழையால் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தொடர் மழையால் 6 ஆண்டுகளுக்கு பிறகு தொப்பையாறு அணை நிரம்பியதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நல்லம்பள்ளி:
தொடர் மழையால் 6 ஆண்டுகளுக்கு பிறகு தொப்பையாறு அணை நிரம்பியதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொப்பையாறு அணை
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. இதையடுத்து நல்லம்பள்ளி, பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக தொப்பையாறு அணை 6 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று பொதுப்பணித்துறை நீர்வள ஆதார மாவட்ட பொறியாளர் குமார், உதவி பொறியாளர் மாலதி ஆகியோர் மதகில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரை திறந்து வைத்தனர்.
இதனால் தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
5 ஆயிரம் ஏக்கர் நிலம்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறும் போது, தொடர்மழையால் 6 ஆண்டுகளுக்கு பிறகு தொப்பையாறு அணை நிரம்பி உள்ளது. ஒரு மதகில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரிநீரால் தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், செக்காரப்பட்டி, உம்மியம்பட்டி, கம்மம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பம்பட்டி, எருமாபட்டி, வெள்ளார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனர்.
Related Tags :
Next Story