மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கள்ளக்காதலியுடன் கைது


மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கள்ளக்காதலியுடன் கைது
x
தினத்தந்தி 23 Nov 2021 11:07 AM IST (Updated: 23 Nov 2021 11:07 AM IST)
t-max-icont-min-icon

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை கள்ளக்காதலியுடன் அரூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி:
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கள்ளக்காதலியுடன் அரூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
தலைமறைவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கலசம்பாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 33). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கட்ராமனுக்கு மாம்பாடி பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த கவிதா கணவரை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கட்ராமன் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு திடீரென தலைமறைவாகிவிட்டார்.
கள்ளக்காதலியுடன் கைது
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கட்ராமன் தனது கள்ளக்காதலியுடன் ஊருக்கு வந்துள்ளார். தகவலறிந்த கவிதா தனது கணவர் மற்றும் அந்த பெண்ணிடம் சென்று என்னையும், குழந்தையையும் தவிக்க விட்டு சென்றது நியாயம்தானா? என தட்டி் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் கவிதாவை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பாக கவிதா அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வெங்கட்ராமன் மற்றும் அவருடைய கள்ளக்காதலி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story