மாணவர்களிடம் பணம் வசூல் ஓசூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

மாணவர்களிடம் பணம் வசூல் ஓசூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2021 11:38 AM IST (Updated: 23 Nov 2021 11:38 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களிடம் பணம் வசூலித்த ஓசூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி:
மாணவர்களிடம் பணம் வசூலித்த ஓசூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பணம் வசூல் 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள சூடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் வெள்ளத்தங்கம். இவர் பள்ளி மாணவர்களிடம் 200 ரூபாய் வீதம் பணம் வசூலித்துள்ளார். இதுகுறித்து பெற்றோர்களின் புகாரின் பேரில், ஓசூர் கல்வி அலுவலர் முருகன் நேரில் சென்று பள்ளியில் விசாரணை நடத்தினார்.
அப்போது காரணம் இன்றி மாணவர்கள் பலரிடம் தலைமை ஆசிரியை பணம் வசூலித்தது தெரிய வந்தது. மேலும் பள்ளியில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது. அதேபோல பள்ளியில் மின் வயர்கள் ஆபத்தான நிலையில் இருந்தது. 
பணியிடை நீக்கம் 
இதுகுறித்து அவர், மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு அறிக்கை சமர்பித்தார். அதன்பேரில் பள்ளியை முறையாக பராமரிக்காதது, மாணவர்களிடம் பணம் வசூலித்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியை வெள்ளத்தங்கத்தை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

Next Story