கயத்தாறு அருகே கடனை திருப்பிதர மறுத்த விவசாயி அரிவாளால் வெட்டப்பட்டார்
கயத்தாறு அருகே கடனை திருப்பிதர மறுத்த விவசாயி அரிவாளால் வெட்டப்பட்டார்
கயத்தாறு:
கயத்தாறு அருகேயுள்ள திருமங்களக்குறிச்சி நடுத்தெருவில் வசித்து வருபவர் பூமாரியப்பன் (வயது 56). விவசாயி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, உறவினரான வடக்கு கோனார்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராசையா மகன் சீனிப்பாண்டியிடம்(52) சில லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தாராம். வாங்கிய கடனை பூமாரியப்பன் திருப்பி தராமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வடக்கு கோனார்கோட்டை கிராமத்திலுள்ள தனியார் நிறுவனம் அருகே வந்த பூமாரியப்பனை வழிமறித்து, சீனிப்பாண்டியும், அவரது மகன் சுடலைமணியும் (36) கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதில் ஏற்பட்ட தகராறில் சீனிப்பாண்டியும், சுடலையும் சேர்ந்து அரிவாளால் பூமாரியப்பனை வெட்டியதுடன், அடித்து உதைத்து விட்டு 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் பூமாரியப்பனை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டோணி தீலிப் வழக்குப்பதிவு செய்து சீனிப்பாண்டியை கைது செய்தார். சுடலைமணியை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story