செடிகள் அகற்றும் பணி


செடிகள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 23 Nov 2021 5:26 PM IST (Updated: 23 Nov 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

செடிகள் அகற்றும் பணி

திருமூர்த்தி அணை கரைப்பகுதியில் செடிகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் பெறுகிறது. இந்த அணையில் இருந்து  ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், பூலாங்கிணர், கொமரலிங்கம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் காண்டூர் கால்வாயில் தொடர் நீர்வரத்து உள்ளதாலும் அணையின் நீர்இருப்பு தொடர்ந்து 55 அடியில் நீடித்து வருகிறது. 
செடிகள் அகற்றும் பணி
அத்துடன் அணையின் கரை பகுதியில் தொடர் மழையின் காரணமாக செடிகள், புற்கள் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வருகிறது. அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்புகருதி கரைப்பகுதியில் முளைத்துள்ள செடிகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கி உள்ளனர்.அணையின் முகப்பு பகுதியில் இருந்து காண்டூர் கால்வாய் அருகே உபரிநீர் வெளியேறும் சட்டர்கள் வரையிலும் இந்த பணி நடைபெறுகிறது. இதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story