அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்


அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்
x
தினத்தந்தி 23 Nov 2021 5:42 PM IST (Updated: 23 Nov 2021 5:42 PM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்

தளி
பல்வேறு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக  நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் உடுமலையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வருகை தருகின்றனர். அதில் ஒரு சில சேவையைத் தவிர மற்ற சேவையை காத்திருந்து பெற வேண்டிய சூழல் உள்ளது. இந்த சுழலில் அரசு அலுவலகங்களில் முறையான சுகாதார வளாகவசதி மற்றும் போதுமான அளவு இருக்கைகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் கால்கடுக்க நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவதுடன் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் பெண்கள் உடல் மற்றும் மனரீதியான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது குறித்து எந்த ஒரு அரசு அலுவலக நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.பொதுமக்கள் மூலம் வருமானம் ஈட்டும் அரசு அதிகாரிகள் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துதர வேண்டியது கடமையாகும்.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடுமலை பகுதியில் இயங்கி வருகின்ற அரசு அலுவலகங்களில் சுகாதாரமான குடிநீர், தேவையான இருக்கைவசதி மற்றும் முறையான சுகாதார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story