காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்
x
தினத்தந்தி 23 Nov 2021 6:34 PM IST (Updated: 23 Nov 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் வருகிற 25, 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.


சிறப்பு முகாம்கள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைக்கு மாற்றாக மத்திய அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெற்றிடும் வகையில் கீழ்காணும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

காஞ்சீபுரம், வாலாஜாபாத் வட்டம்

காஞ்சீபுரம் வட்டத்தில் வரும் 25-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் காஞ்சீபுரம், சிறுகாவேரிபாக்கம், திருப்புக்குழி, பரந்தூர், கோவிந்தவாடி, சிட்டியம்பாக்கம்.

வாலாஜாபாத் வட்டத்தில் 25-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாகரல், வாலாஜாபாத், தென்னேரி ஆகிய இடங்களிலும்.

உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம்

உத்திரமேரூர் வட்டத்தில் 25-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உத்திரமேரூர், திருப்புலிவனம், சாலவாக்கம், அரும்புலியுர், குண்ணவாக்கம், கலியாம்பூண்டி.

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வரும் 26-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வல்லம், மதுரமங்கலம், தண்டலம் ஆகிய இடங்களிலும்.

குன்றத்தூர் வட்டம்

குன்றத்தூர் வட்டத்தில் 26-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கம், செரப்பணஞ்சேரி, படப்பை ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இதுவரை தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) பதிவு செய்திடாத மாற்றுத்திறனாளிகள் நடைபெறும் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளின் அனைத்து பக்கங்கள் மற்றும் மருத்துவ சான்றுடன், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்(2) ஆகிய ஆவணங்களின் தெளிவான நகல்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகியவைகளுடன் மேற்படி முகாமில் சமர்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story