தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்


தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்
x
தினத்தந்தி 23 Nov 2021 6:43 PM IST (Updated: 23 Nov 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்

ஏரல்:
தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
வெள்ளம் இழுத்து சென்றது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சாயர்புரம் சர்ச் தெருவை சேர்ந்த ஜான்சன் மகன் கிப்சன் (வயது 30). இவர் குளிர்பான ஏஜென்டாக இருந்து வந்தார்.
கிப்சன் நேற்று முன்தினம் மதியம் நண்பர்களுடன் ஏரல் அருகே உள்ள மேலமங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் திடீரென ஏற்பட்ட  வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். அவருடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் கரையேறி தப்பினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, ஆற்றுக்குள் தேடும் பணியை முடுக்கி விட்டனர். நள்ளிரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிணமாக மீட்பு
 மீண்டும் நேற்று காலையில் தீயணைப்பு துறையினர் 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் அவர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து  சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆற்று மணலுக்குள் புதைந்த நிலையில்  கிப்சன் உடலை கண்டுபிடித்தனர்.
தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு ஏரல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரது உடலை பெற்றுக்கொண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story