விளாத்திகுளம் அருகே மனைவி தற்கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்
விளாத்திகுளம் அருகே மனைவி தற்கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிபட்டி சாலமன்நகர் பகுதியை சேர்ந்த தம்பிராஜா மகன் ஆசீர்வாதம் (வயது 34). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரஞ்சிதா (31). ஆசீர்வாதம் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரஞ்சிதா வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தையான காயல்பட்டினம் கொம்புத்துறை பகுதியை சேர்ந்த சின்னதுரை (58) விளாத்திகுளம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிவு செய்து, ரஞ்சிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசீர்வாதத்தை கைது செய்தார்.
Related Tags :
Next Story