கிராம மக்கள் திடீர் போராட்டம்


கிராம மக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 8:49 PM IST (Updated: 23 Nov 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

கிராம மக்கள் திடீர் போராட்டம்

கோத்தகிரி

கோத்தகிரி அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை கண்டித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திட்ட பணிகள் 

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் காலனி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த வருடம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1½ கோடியில் 6 பகுதிகளில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. 

மேலும் தற்போது அதே திட்டத்தின்கீழ் தடுப்புச் சுவர்களை பராமரிப்பு செய்வதற்காக ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 

கிராம மக்கள் போராட்டம் 

இந்நிலையில் ஏற்கனவே அங்கு கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களின் மேற் பகுதியை இடித்து அதற்கு மேலாக தடுப்புச்சுவர் கட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

இந்த நிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள குடியிருப்பு பகுதியில் புதிய தடுப்புச்சுவர் கட்ட வேண்டும், ஏற்கனவே செய்யப்பட்டு வரும் பணிகளை அதிகாரிகள் கண்காணிப்பது இல்லை என்றுக்கூறி கிராம மக்கள் ஊர்தலைவர் பத்மநாபன் தலைமையில் வள்ளுவர் காலனி சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசார் பேச்சுவார்த்தை 

இது குறித்து தகவல் அறிந்து கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், புஷ்பராஜ், மனோகரன், ரமேஷ் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் இது குறித்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 


Next Story